பஹத் பாசிலுடன் இணையும் பிசாசு நாயகி!!

Read Time:1 Minute, 39 Second

ecba87a6-aadf-43f3-bead-9f88cd438d85_S_secvpfமிஷ்கின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பிசாசு’. இப்படத்தில் பிசாசாக நடித்து பெயர் பெற்றவர் பிரயாகா. இவரது முழு பெயர் பிரயாகா மார்ட்டின். கேரள மாநிலம் கொச்சினை சேர்ந்த இவர் மாடலிங் துறையில் இருந்து ‘பிசாசு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.

தனது முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது பிரயாகாவை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து பிரயாகாவுக்கு மலையாள முன்னணி நடிகர் பஹத் பாசிலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மலையாளத்தில் உருவாகும் ‘கார்ட்டூன்’ என்ற திரைப்படத்தில் பஹத் பாசிலுடன் இணைந்து நடிக்கிறார் பிரயாகா. ஆக்ஷனும் காதலும் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் பிரயாகா கல்லூரி மாணவியாக நடிக்கிறாராம். பஹத் அனிமேஷன் வல்லுனராக நடிக்கிறாராம். இப்படம் விரைவில் உருவாக இருக்கிறது. தனது தாய்மொழியான மலையாளத்தில் முதல் படமே பஹத் பாசிலுடன் இணைந்து நடிப்பது பிரயாகாவுக்கு கூடுதல் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொங்கல் செலவுக்காக பெண்ணிடம் நகை பறித்த என்ஜினீயர் கைது!!
Next post வெளிநாடுகளில் இணையதளத்தில் வெளியாகும் லிங்கா!!