விஜய்யின் தீவிர ரசிகையான கப்பல் நாயகி!!

Read Time:2 Minute, 38 Second

31a585a4-942a-42c0-ac92-5175c7806100_S_secvpf‘கப்பல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சோனம் பாஜ்வா. இவருடைய முதல் படமே பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளிவந்தது அவருக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. தற்போது படமும் ஓரளவுக்கு வெற்றியை தேடிக் கொடுத்துள்ளதால், தனக்கு சினிமாவில் பிரகாசமான எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கையில் கூடுதல் மகிழ்ச்சியுடன் இருந்து வருகிறார்.

இந்நிலையில் ‘கப்பல்’ படத்தின் வெற்றியில் மிதந்து கொண்டிருக்கும் சோனம் பாஜ்வா கூறும்போது, நான் பஞ்சாப்பை சேர்ந்தவள். என்னுடைய நண்பர்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்தான்.

நாடே போற்றும் இயக்குனரான ஷங்கரின் தயாரிப்பில் என்னுடைய முதல் படம் வந்தது எனக்கு மிக மிக பெருமை. ‘கப்பல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் திரை உலகின் தூண்களான விஜய், விக்ரம், ஏ.ஆர்.ரகுமான், ஷங்கர் அனைவரையும் ஒரே மேடையில் சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவர்களது கனிவான வார்த்தைகளும், ஊக்கமும் என்னை உற்சாகமூட்டியது.

இதற்கு பிறகு நான் விஜய்க்கு தீவிர ரசிகை ஆகி விட்டேன். எளிமையாக அதே நேரம் எல்லோரையும் கவரும் காந்தமுமாக இருந்தார். அவருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை. அவருடன் ஜோடியாக ஒரு படம் நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறேன். அது இந்த வருடமே கை கூடும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

கப்பல் படத்துக்கு பிறகு எனக்கு எண்ணற்ற வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. அதன் சம்மந்தமாக விரைவில் முறையான அறிவிப்பு வரும். நான் சமீபமாக நிறைய தமிழ் படங்களை பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன். திரை உலகின் நுணுக்கங்களை அந்த படங்கள் மூலம் கற்றுக் கொண்டு வருகிறேன் என்று கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒருதலை காதல்: காதலை ஏற்க பெண் மறுத்ததால் ஊமத்தங்காயை தின்ற லோடு மேன்!!
Next post திருவண்ணாமலையில் போலி டாக்டர் கைது!!