இந்தியாவில் விற்பனைக்கு வந்ததுசோனியா காந்தியின் இளமைக் காலத்தை விவரிக்கும் சிகப்பு சேலை புத்தகம்: இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!!

Read Time:2 Minute, 37 Second

37fa73b3-3c81-44fc-92a1-de08eeb4357e_S_secvpfகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்க்கையின் இளமைக் காலத்து வாழ்க்கை குறிப்புகளை விவரிக்கும் ‘சிகப்பு சேலை’ புத்தகம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜேவியர் மோரோ என்பவர் இயற்றிய இந்த புத்தகத்தில் சோனியா காந்தியின் குழந்தைப் பருவம், இளமைக் காலம், ராஜீவுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு, திருமணம், மற்றும் ராஜீவின் மறைவுக்கு பின்னர் இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்மணியாக உயர்ந்தது, இத்தனை உயர்வான நிலையில் இருந்தும் பிரதமர் பதவி வேண்டாம் என மறுத்தது உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவை தொடர்பான முக்கிய குறிப்புகளை சோனியாவின் நெருங்கிய நண்பர்களிடம் இருந்து திரட்டி இந்த புத்தகத்தை உருவாக்கியிருந்ததாக நூலாசிரியர் தெரிவித்திருந்தார்.

2008-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டு மொழியில் வெளியான இந்த புத்தகத்தில் பொய்களும், பாதி உண்மைகளும், தவறான தகவல்களும், தரக்குறைவான கருத்துகளும் இடம் பெற்றிருப்பதாக கண்டனம் தெரிவித்த சோனியா காந்தியின் வக்கீல்கள் கடந்த 2010-ம் ஆண்டு நூலாசிரியர் ஜேவியர் மோரோவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில், இந்த சர்ச்சைக்குரிய ‘சிகப்பு சேலை’ புத்தகம் இந்தியப் பதிப்பாக தற்போது கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளதாக ரோலி புக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 455 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை 395 ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் மொழியில் ஜேவியர் மோரோ எழுதிய மூலப்பிரதியில் இருந்து சில மாற்றங்களை செய்து இந்த ’இந்தியப் பதிப்பு’ வெளியாகி இருக்கலாம் என கருதப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சங்கரன்கோவில் அருகே சொத்து தகராறில் விவசாயி அடித்துக்கொலை: தாய்– மகனுக்கு வலைவீச்சு!!
Next post உலகிலேயே அதிக விடுமுறை தினங்கள் கொண்ட நாடு இந்தியா!!