குடியிருப்பு, தோட்டம் ஆகியவற்றின் மதிப்பை தவறாக காட்டினாராம் ஜெயா!!

Read Time:2 Minute, 0 Second

1937347117jayalalitha-5பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை பெங்களூர் ஐகோர்ட்டு தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்து வருகிறது.

தினந்தோறும் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். 3 மாதத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தினந்தோறும் விசாரணை நடந்து வருகிறது. ஜெயலலிதா சார்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் நாகேஸ்வரராவ் ஆஜராகி வாதாடி வருகிறார்.

இன்று 9–வது நாளாக மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடந்தது. நீதிபதி குமாரசாமி முன்னிலையில் வக்கீல் நாகேஸ்வரராவ் ஆஜராகி இன்றும் வாதம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சொத்து குவிப்பு வழக்கில் காட்டப்பட்டுள்ள சொத்துக்கள் முறையாக மதிப்பீடு செய்யப்படவில்லை. ஜெயலலிதா குடியிருக்கும் போயஸ்கார்டன், அவருக்கு சொந்தமான திராட்சை தோட்டம் ஆகியவற்றின் மதிப்பை தவறாக கணக்கிட்டுள்ளனர். இவற்றின் மதிப்பு அதிகப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் வாதாடினார். தொடர்ந்து வாதம் நடைபெறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரேணிகுண்டா அருகே ரெயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை!!
Next post மன்னார்குடி அருகே 9 வயது சிறுமி பலாத்காரம்!!