தியாகதுருகத்தில் வீடுகளில் கூட்டமாக புகுந்து சூறையாடும் குரங்கு கூட்டம்: 2 மாதத்தில் 50 பேரை கடித்தது!!

Read Time:2 Minute, 5 Second

d19d5dcc-36fe-459c-ae71-99a338aa1c4e_S_secvpfதியாகதுருகம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பெரிய சவாலாக குரங்குகள் தொல்லை உள்ளது.

பகல் முழுவதும் முக்கியமாக காலை நேரங்களில் வேலைக்கு செல்லும் பரபரப்பில் இருக்கும்போது வீடுகளில் புகுந்து உணவு, பழங்கள் சாப்பிடும் பொருட்கள் எவை இருந்தாலும் கூட்டமாக சென்று சூறையாடி தின்று விடுகின்றன.

சில நேரங்களில் பெண்கள் வயதானவர்கள் குரங்குகளை விரட்டி உணவு பொருட்களை காப்பாற்ற முயலும்போது அவர்களை கடித்து விடுகின்றது.

கடந்த 2 மாதங்களில் 50–க்கும் மேற்பட்டவர்கள் குரங்கு கடிக்கு ஆளாகி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

குரங்குகளின் எண்ணிக்கை 500–க்கும்மேல் உள்ளதால் கிராம பகுதிகளில் இருந்து பிடித்து வரும் குரங்குகளை இங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க மலைக்கோட்டையில் விட்டு விடுகின்றனர். இதனால் புதியதாக இந்த பகுதிக்கு வந்த குரங்கு கூட்டமும், பழைய குரங்கு கூட்டமும் உணவு பறிக்கும்போது சண்டை ஏற்படுகின்றது. இதனால் அப்பகுதி போர்களமாகி அப்பகுதியை பொதுமக்கள் நடமாடமுடியாமல் ஆகிவிடுகிறது. இதுபோன்ற நிகழ்வால் நகர வாசிகள் குரங்குகளை கண்டு அஞ்சுகின்றனர்.

குரங்கு தொல்லையில் இருந்து காப்பற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விருத்தாசலம் அருகே இளம்பெண் கடத்தல்: வாலிபர் உள்பட 4 பேர் மீது வழக்கு!!
Next post திரிபுராவில் சிறுமியை உயிரோடு புதைக்க முயன்ற தந்தை சிறையில் அடைப்பு!!