கடையநல்லூரில் மாயமான பிளஸ்–2 மாணவி எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம்!!

Read Time:2 Minute, 24 Second

5c7c4ee4-7fcb-431c-8463-b1b4ec49bf2f_S_secvpfகடையநல்லூர் கட்டிவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகையா. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களது மகள் அகிலா (வயது 17). அங்குள்ள பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.

இந்நிலையில் அகிலா சரியாக படிக்கவில்லையாம். இதனால் அவரை அவரது தாய் சத்தம் போட்டுள்ளார். இதன் காரணமாக தாய்–மகள் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 13–ந்தேதி பள்ளிக்கு சென்ற அகிலா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து ராஜலட்சுமி கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சிவா என்பவர் அகிலாவை கடத்தி சென்றிருப்பதாகவும், எனவே மகளை மீட்டு தர வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து போலீசார் சிவாவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடத்தி செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அகிலாவை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று நெல்லை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்த அகிலா, எஸ்.பி.நரேந்திரன்நாயர் முன்பு ஆஜர் ஆனார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தனது தாய் நன்றாக படிக்கும்படி திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், திருச்செந்தூர், தூத்துக்குடி என ஒவ்வொரு ஊராக சென்ற நான் பணம் இல்லாததாலும், போலீசார் தேடுவதை அறிந்தும் எஸ்.பி.அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தேன் என்றார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் பின்னர் நெல்லையில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சூனியக்காரர்கள் என்று கூறி 8 பேரின் பல்லை பிடுங்கி, மொட்டை அடித்து, மலம் தின்ன வைத்து கொடுமைப்படுத்திய கும்பல்!!
Next post காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் மதுரை ஆசிரியை தற்கொலை முயற்சி!!