விடுதலையான இரும்புப் பெண் ஐரோம் ஷர்மிளா மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கினார்!!

Read Time:2 Minute, 55 Second

3426080b-4062-4dbd-9d57-ea90314f956c_S_secvpfஉண்ணாவிரதம் இருந்ததற்காக தற்கொலை முயற்சி குற்றப்பிரிவு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்து, நேற்றிரவு விடுதலையான ஐரோம் ஷர்மிளா மீண்டும் தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

மணிப்பூரின் இரும்புப்பெண் என்று அழைக்கப்படும் ஐரோம் ஷர்மிளா, அம்மாநிலத்தில் அமலில் இருக்கும் ராணுவப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப்பெற கோரி கடந்த 2000–ம் ஆண்டு முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

அவரை கைது செய்த காவல்துறையினர், தற்கொலைக்கு முயன்றதாக கூறி அவர் மீது வழக்கு தொடர்ந்து, நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை இம்பால் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து 14 ஆண்டுகளுக்கு பின் அவர் கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

எனினும், விடுதலையானவுடன் அவர் தனது உண்ணாவிரதத்தை தொடர முயற்சித்ததால், அவரை போலீசார் மீண்டும் கைது செய்தனர். மேலும் தற்கொலைக்கு முயன்றதாக புதிய வழக்கை பதிவு செய்து மறுபடியும் அவரை சிறைக்குள் தள்ளினர்.

இந்நிலையில் நேற்று இம்பால் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஐரோம் ஷர்மிளா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்த நீதிபதி அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து, நேற்றிரவு சிறையில் இருந்து விடுதலையான ஐரோம் ஷர்மிளா இம்பால் நகரில் உள்ள மார்க்கெட் பகுதிக்கு சென்றார். அங்கு மீண்டும் தனது உண்ணாவிரதத்தை தொடங்கிய அவர், தொடர்ந்து உண்ணாநிலையை மேற்கொண்டு வருகிறார்.

அவரை பழையபடி ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு கூறிய போலீசாரின் அறிவுறுத்தலை ஏற்றக் கொள்ளவும் ஷர்மிளா மறுத்து விட்டார். அவரை மருத்துவர் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2 ஆண்டுகளாக வீட்டுக்குள் அடைத்து வைத்து சிறுமி கற்பழிப்பு: பட்டதாரி வாலிபர் பெற்றோருடன் கைது!!
Next post 7800 கோடி ரூபாய் கேட்டு ஒபாமாவுக்கு கடிதம் தயாரித்த நபர் பீகாரில் பிடிபட்டார்!!