கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை!!

Read Time:3 Minute, 5 Second

bbcb8004-c39b-4089-929f-d94133b2f470_S_secvpfகும்பகோணம் அருகே உள்ள கபிஸ்தலம் உமையாள்புரம் நடுத் தெருவை சேர்ந்தவர் அன்பு என்கிற அன்பழகன் (35).

இவர் மலேசியாவில் வேலை பார்த்த போது அங்குள்ள தனது உறவினர் மகளை காதலித்தார். பின்னர் சொந்த ஊர் திரும்பி விட்டார்.

இந்த நிலையில் தான் காதலித்த பெண்ணை மலேசியாவில் இருந்து உமையாள்புரத்திற்கு வரழைத்து கடந்த 3 மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

அன்பழகன் திருப்பனந்தாளில் ஒரு பெட்ரோல் பங்கும், உமையாள்புரத்தில் மாட்டுப் பண்ணையும் நடத்தி வந்தார். மேலும் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார்.

நேற்று இவர் வெளியே சென்று வருவதாக மனைவியிடம் கூறி விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார். இந்த நிலையில் அவர் கபிஸ்தலம் சின்னமரத்து பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்திற்கு எதிரே காவிரி ஆற்றங்கரை செல்லும் வழியில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

அவரது கழுத்து பகுதியில் பலத்த வெட்டு காயங்கள் இருந்தது. அவரை மர்ம ஆசாமிகள் வெட்டி கொன்றது தெரிய வந்தது. அவர் ஓட்டி சென்ற இரு சக்கர வாகனம் அருகில் கிடந்தது. இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் கபிஸ்தலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துசாமி, சப்–இன்ஸ்பெக்டர் வள்ளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

தஞ்சையில் இருந்து தடயவியல் நிபுணர் மற்றும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர் தடயங்களை சேகரித்தார்.

கொலை செய்யப்பட்ட அன்பழகன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அவரது தந்தை லெட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

முன் விரோதம் காரணமாக இக்கொலை நடைபெற்றதா? கொடுக்கல்–வாங்கல் தகராறில் அன்பழகன் கொல்லப்பட்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மும்பையில் குடியேற திட்டமா?: தனுஷ் விளக்கம்!!
Next post எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை: நடிகை அஞ்சலி!!