மும்பையில் குடியேற திட்டமா?: தனுஷ் விளக்கம்!!

Read Time:1 Minute, 37 Second

d75dbeff-db11-44fb-baff-caf82987b0d6_S_secvpfதனுசுக்கு இந்தி பட வாய்ப்புகள் குவிகின்றன. இதனால் நிரந்தரமாக மும்பையில் குடியேற அவர் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக அங்கு வீடு பார்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ் படங்களில் நடிப்பதை குறைப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்தியில் சோனம்கபூர் ஜோடியாக நடித்த ராஜ்சனா படம் வெற்றிகரமாக ஓடியது. தற்போது அமிதாப்பச்சனுடன் ‘ஷாமிதாப்’ இந்தி படத்தில் நடிக்கிறார். இதில் நாயகியாக கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா நடிக்கிறார். இந்த படம் அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் வாரத்தில் ரிலீசாக உள்ளது. இந்த படத்துக்கு பிறகு மேலும் பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தனுசிடம் கேட்டபோது, ‘‘மும்பையில் குடியேறும் திட்டம் இல்லை’’ என்றார். அவர் கூறியதாவது:–

நான் இந்தி படங்களில் மட்டுமே நடிப்பேன் என்றும், மும்பையில் குடியேறுவேன் என்றும் சொல்லப்படுவது வதந்திதான். தமிழ் படங்களை விட்டு விலக மாட்டேன். நடிகர் என்ற முறையில் எல்லா மொழி படங்களிலும் நடிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கன்னியாகுமரி அருகே ஆடு மேய்க்க சென்ற பெண் கடத்தி கற்பழிப்பு: இலங்கை அகதி கைது!!
Next post கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை!!