ரயில் பயணத்தில் முகம் தெரியாத பாராட்டால் நெகிழ்ந்துபோன இளம் அம்மா (வீடியோ இணைப்பு)!!

Read Time:3 Minute, 48 Second

sammie_mummy_002பிரித்தானியாவை சேர்ந்த 23 வயது இளம் அம்மா ஒருவருக்கு ரயில் பயணத்தின் போது முகம் தெரியாத மனிதரிடம் இருந்து தாய்மைக்கான பாராட்டு கிடைத்துள்ளது.
சமந்தா வெல்ச் (23) என்ற பெண்மணி கணவர் இல்லாமல் தனியே மகனை வளர்த்து வருகிறார்.

அவர் தனது மூன்று வயது மகன் ரெய்லானுடன் பிர்மிங்காம் நகரில் இருந்து பிளைமூத் நகருக்கு ரயிலில் சென்றுள்ளார்.

அப்போது ரயில் பயணத்தில் தனது சுட்டி பையனை மிகவும் அன்பாகவும், பொறுமையாகவும் கதை சொல்லியபடி அவனோடு விளையாடிக்கொண்டே இருந்துள்ளார். பின்னர் சிறுவன் ரெய்லானும் விளையாடியபடி மெல்ல உறங்கியுள்ளான்.

ரயிலில் அப்போது கூட்டம் அதிகமாகி பலரும் நின்று கொண்டிருந்ததால், சமந்தா தனது மகனை தூக்கி தன் மீது அமர வைத்துக்கொண்டு, இன்னொருவர் உட்கார இடம் கொடுத்துள்ளார்.

பின்னர் சிறிதுநேரம் கழித்து பிரிஸ்டல் ரயில் நிலையத்தில் இறங்கிய பெரியவர் ஒருவர், சமந்தாவை அழைத்து, உங்கள் பையில் இருந்து கீழே விழுந்துவிட்டது’ என்று ஒரு சீட்டை கையில் கொடுத்துவிட்டு இறங்கி சென்றுள்ளார்.

அந்த சீட்டை பிரித்து பார்த்த போது அதில், நீ இந்த தலைமுறைக்கே எடுத்துக்காட்டு. அன்பாக, அமைதியாக பிள்ளைக்கு நல்ல பழக்கத்தை கற்று கொடுத்தாய் என்று பாராட்டி எழுதப்பட்டிருந்ததுடன், என் சார்பாக ஒரு காபி அருந்தி மகிழுங்கள் என்ற குறிப்புடன் 5 பவுண்ட் பணமும் இணைக்கப்பட்டிருந்தது.

மேலும், உன் வயதில் எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள் என்றும் அவளும் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதை படித்த சமந்தா, முகம் தெரியாத மனிதரிடம் இருந்து கிடைத்த பாராட்டால் நெகிழ்ந்து போயுள்ளார்.

அந்த கடித குறிப்பு பற்றி நாளிதழ் ஒன்றுக்கான பேட்டியில் சமந்தா பேசுகையில், இதை படித்ததும் என்னால் நம்பவே முடியவில்லை, இருபது முறையாவது மீண்டும் மீண்டும் படித்திருப்பேன்.

நான் பார்த்து பேசியிராத ஒருவர் இப்படி எழுதியதை என்னால் நம்ப முடியவில்லை என்றும் இப்படி அவரை எழுத வைக்கும் அளவுக்கு நான் என்ன செய்தேன் என்று தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின் அந்த நல்ல மனிதரை எப்படியாவது நேரில் பார்த்து நன்றி சொல்லிவிட வேண்டும் என்பதற்காக அவரை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

மேலும், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த சம்பவத்தை விவரித்து, அவரைப்பற்றிய விவரம் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள் என கேட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிழக்கு மாகாண சபை: சிவில் சமூகத்தின் தலையீடு உடன் அவசியம்! -எம்.பௌசர் (கட்டுரை)!!
Next post லிபியா நட்சத்திர ஓட்டலில் 3 காவலர்கள் கொலை: பொதுமக்களை பணய கைதிகளாக பிடித்த தீவிரவாதிகள்!!