சேரனின் சினிமா டூ ஹோம் திட்டத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு!!

Read Time:2 Minute, 39 Second

2198eef8-5ae0-4f6b-8024-1fc27734962e_S_secvpfடைரக்டர் சேரன் சினிமா டூ ஹோம் என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். இதன் மூலம் புதுப்பட டி.வி.டி.க்கள் நேரடியாக வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் என்று அறிவித்து உள்ளார்.

இந்த முறை மூலம் படங்கள் தியேட்டர்களில் வெளியாகும் அதே நாளில் முதல் காட்சியாக டி.வி.டி.யில் வீடுகளிலும் பார்க்கலாம்.

இத்திட்டத்தின் மூலம் சேரன் இயக்கிய ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை டி.வி.டி.யாக வீடுகளில் கடந்த பொங்கலன்று விநியோகம் செய்ய ஏற்பாடு நடந்தது. பின்னர் அது 30–ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இப்போது மீண்டும் தள்ளிப் போகிறது.

இதுகுறித்து டைரக்டர் சேரன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–

சினிமா டூ ஹோம் திட்டம் மூலம் ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை நாளை (30–ந் தேதி) டி.வி.டி.யாக வீடுகளில் சப்ளை செய்ய இருந்தோம். தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவர் கலைப்புலி தாணு மற்றும் விநியோகஸ்தர்களை நேற்று சந்தித்து இத்திட்டம் குறித்து விளக்கினேன்.

கலைப்புலி தாணு நல்ல முயற்சி என்று பாராட்டினார். தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் பலன் அளிக்கும் திட்டம் என்றும் கூறினார். இரு வாரங்கள் கழித்து நடிகர்– நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரை அழைத்து பிரமாண்டமாக இந்த திட்டத்தின் தொடக்க விழாவை நடத்தலாம் என்று யோசனை தெரிவித்தார். அதை ஏற்றுக் கொண்டேன்.

நாளை தொடங்க இருந்த இத்திட்டம் கலைப்புலி தாணு வேண்டுகோளுக்கிணங்க தள்ளி வைக்கப்படுகிறது. விரைவில் நடிகர், நடிகை வைத்து பிரமாண்டமாக இதன் தொடக்க விழா நடத்தப்படும்.

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட திலையுலகினரின் கூட்டு முயற்சியாக இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு சேரன் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உ.பி.யில் பள்ளிக்கு சென்ற 7 வயது சிறுவன் சுட்டுக் கொலை!!
Next post ரெயிலில் பெண்ணிடம் 6 பவுன் தாலி செயின் பறிப்பு: வாலிபர் கைது!!