திருநங்கைகள் ரெயில் பயணிகளிடம் கட்டாய வசூல் செய்ய கூடாது: போலீசார் கடும் எச்சரிக்கை!!

Read Time:1 Minute, 36 Second

7e4217f0-2563-4c9e-9411-5ed4e85609ee_S_secvpfஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ரெயில் நிலைய அதிகாரி ராஜா தலைமை தாங்கினார்.

ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லத்துரை, திருநங்கைகளின் சட்ட ஆலோசகர் பிரேமாபாரதி, முதன்மை டிக்கெட் பரிசோதகர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், ஓடும் ரெயிலில் பயணிகளிடம் கட்டாயமாக வசூல் செய்யக்கூடாது, பயணிகளை துன்புறுத்தக்கூடாது, ரெயில் பயணிகளிடம் இருந்து ஏதாவது புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,

ஓடும் ரெயிலில் ஏதாவது பிரச்சனை என்றால் திருநங்கைகள் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பவராக இருக்க வேண்டும் என திருநங்கைகளிடம் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை சப்–இன்ஸ்பெக்டர் தவமணி, ரெயில்வே சப்–இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன், ராஜா மற்றும் போலீசாரும், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம் பகுதிகளில் இருந்து ஏராளமான திருநங்கைகளும் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாயமான பெண் கள்ளக்காதலனுடன் போலீசில் சரண்: கணவருடன் செல்ல மறுப்பு!!
Next post இயற்கை உபாதையை கழிக்க சென்ற 15 வயது சிறுமியை கடத்தி 4 நாட்களாக அடைத்துவைத்து கற்பழித்த இருவர் கைது!!