சிம்பு படத்தில் ஜெய் கௌரவ வேடம்!!

Read Time:1 Minute, 39 Second

Untitled-141சிம்பு- நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இது நம்ம ஆளு’. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை சிம்பு தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார்.

நீண்டகால தயாரிப்பில் இருந்துவரும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இது இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

கடந்த மூன்று வருடமாக சிம்பு நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படத்தின் டீசர் இரசிகர்களை திருப்தி படுத்தி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது இந்தப்படத்தில் ஜெய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. அடுத்த வார படப்பிடிப்பில் ஜெய் கலந்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெய் வரும் காட்சி படத்திற்கு திருப்புமுனையாக இருக்கும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர். ஏற்கனவே ஆண்ட்ரியா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எழும்பூர் லாட்ஜில் தங்கிய ஜப்பான் வாலிபர் திடீர் மாயம்!!
Next post சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் டீ, காபி பரிமாறும் பேப்பர் கப்களில் மோடி, அமித்ஷா படங்கள்: விசாரணைக்கு உத்தரவு!!