மனைவி இறந்த துக்கம் தாங்காமல் காதலர் தினத்தில் உயிரை விட்ட முதியவர்!!

Read Time:1 Minute, 50 Second

0040846b-8b5a-4099-962f-03353f5e0996_S_secvpfகோவை மதுக்கரை மார்க்கெட் அருகேயுள்ள சர்ச் காலனி பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி கவுண்டர் (வயது 87). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவராக இருந்தார். இவரது மனைவி பழனியம்மாள் (75). இவர்கள் இருவரும் கடந்த 65 வருடங்களுக்கு முன்பு காதலித்து பல்வேறு சிரமங்களுக்கு இடையில் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். 3 பேரும் திருமணமாகி குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 10.2.2015 அன்று உடல்நலக்குறைவால் பழனியம்மாள் இறந்து விட்டார்.

இதன்காரணமாக மனமுடைந்து காணப்பட்ட பொன்னுச்சாமி யாரிடமும் சரியாக பேசாமல் இருந்தார். இந்தநிலையில் பழனியம்மாளின் சடங்கு விழா காதலர் தினத்தன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு வீடு திரும்பிய பொன்னுசாமி கவுண்டர் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் படுக்கைக்கு சென்றார். படுத்தவர் எழுந்திருக்கவில்லை. அவரது உறவினர்கள் அவரை எழுப்ப முயன்ற போது அவர் இறந்தது தெரிய வந்தது.

காதல் வாழ்க்கையில் இணைந்த மனைவி இறந்ததால் காதலர் தினத்திலேயே பொன்னுச்சாமி கவுண்டரும் இறந்து தன் மனைவி மீதான பாசத்தை நிருபித்து விட்டார் என்று அந்த பகுதி மக்கள் பேசிக் கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜபாளையத்தில் ராணுவ வீரர் தனக்குதானே கத்தியால் குத்தி தற்கொலை!!
Next post ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலி உயிரோடு எரிப்பு: வேன் டிரைவர் கைது!!