(PHOTOS)வவுனியாவில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு உதவி!!

Read Time:1 Minute, 52 Second

unnamed (83)வவுனியா சமூக சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.வாசன் தலைமையில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. உயிரிழை என்ற அமைப்பின் ஊடாக இப்பாடசாலை உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வுவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.வாசன் போரில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் அமைப்பாக உயிரிழை வடமாகாணத்தில் செயல்ப்பட்டுவருகின்றது.

2010 ஆம் ஆண்டளவில் உயிரிழை அமைப்பை உருவாக்கும் திட்டம் வவுனியா பொதுவைத்தியசாலை வைத்திய நிபுணர்களால் முன்னெடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார். இதேவேளை புலம்பெயர் சமூகத்தவர்களின் நிதியுதவி இவ்வமைப்புக்கு கிடைத்துவருவதாக குறிப்பிட்ட அவர் சமூகசேவை உத்தியோகத்தர்கள் அரச அதிகாரிகள் இவ்வமைப்புக்கு உதவத்தயாராய் உள்ளதாகத் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் வவுனியா பொது வைத்தியசாலை மனநல வைத்தியர் எஸ்.சுதாகரன் கலந்துகொண்டார்.
unnamed (81)

unnamed (82)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடுரோட்டில் நிர்வாணமாய் திரிந்த பெண்: ஸ்தம்பித்த போக்குவரத்து!!
Next post அணைக்கட்டு அருகே 5–ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பெயிண்டர் கைது!!