ஐ,நா அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு சில நாடுகள் ஆதரவு!!

Read Time:1 Minute, 30 Second

618815531Untitled-1ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவிருந்த, இலங்கை குறித்த அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு, ஐ.நாவின் உறுப்புரிமை கொண்ட சில நாடுகள் ஆதரவளித்துள்ளன.

இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு இது குறித்து கால அவகாசம் வழங்க வேண்டும் என அந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விசாரணை அறிக்கை அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவிருந்தது.

எனினும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் முயற்சியின் பலனாக அந்த அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது.

இதற்கு ஜப்பான், அமெரிக்கா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளிப்பதாகத், தெரிவித்துள்ளன என ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரவதிவிடப் பிரதிநிதி காரியாலயம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரூ.2 ஆயிரம் பணத்துக்காக சிறுவனை கடத்திய வாலிபர்: திருப்பதியில் போலீசார் கைது செய்தனர்!!
Next post உலக முடிவில் மரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய வௌிநாட்டவர் மீட்பு!!