லக்னோவில் வேகமாக பரவுகிறது பன்றிக்காய்ச்சல்: 24 மணி நேரத்தில் 24 புதிய நோயாளிகள் கண்டுபிடிப்பு!!

Read Time:1 Minute, 29 Second

c524440f-cdbf-40e6-ab39-d063ffc837fd_S_secvpfஉத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 24 பேர் லக்னோவை சேர்ந்தவர்கள், ஒருவர் பரேலியை சேர்ந்தவர்.

இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் கூறுகையில், “652 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டதில் 190 பேருக்கு நோய் பாதித்திருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் 144 பேர் லக்னோவை சேர்ந்தவர்கள். நோயாளிகளுக்கு தனிமை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 15 மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில் முதலமைச்சர் அகிலேஷ் நோய் பாதிப்பை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மக்களுக்கு பன்றிக்காய்ச்சல் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததே இந்நோய் தீவிரமாக பரவுவதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரீ-ஷூட்டிற்குப் பிறகு யு சான்றிதழ் வாங்கிய வஜ்ரம்!!
Next post ஆவணங்கள் திருட்டு அம்பலமானது எப்படி?: 10 ஆண்டுகளாக திருட்டு!!