முருகன், நளினி 9-வது நாளாக உண்ணாவிரதம்
வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி கொலையாளிகள் முருகன், நளினி திங்கள்கிழமை உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர். முருகன்-நளினி தம்பதிகளின் மகள் அரித்திரா (எ) மேகராவுக்கு மத்திய அரசு உடனடியாக “விசா’ வழங்கக் கோரி முருகன் (ஜூன்-25) ஞாயிற்றுக்கிழமையிலிருந்தும், நளினி திங்கள்கிழமையிலிருந்தும் (ஜூன்-26) தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
முருகன் ஒன்பதாவது நாளாகவும், நளினி எட்டாவது நாளாகவும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இருவரும் தண்ணீர் மட்டும் குடித்து வந்தனர். திங்கள்கிழமை காலை சோர்வடைந்ததால் சிறைத்துறை அலுவலர்கள் முருகன், நளினி ஆகிய இருவருக்கும் குளுக்கோஸ் ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்தனர். இருந்தபோதிலும் இருவரும் உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்து விட்டனர்.