நாகை அருகே மாணவியை கடத்தி ரூ.5 லட்சம் கேட்ட வாலிபர் கைது!!
நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள அம்பல் ஊராட்சி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். அந்த மாணவியின் உறவு பெண் ஒருவர் முஸ்லிம் வாலிபரை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவி பள்ளியில் இருந்து வெளியே வந்தபோது அங்கு நின்றிருந்த உறவு பெண்ணை மாணவி சந்தித்தார். அப்போது அவரை உறவு பெண்ணை மணந்த முஸ்லிம் வாலிபர் ஆம்னி வேனில் கடத்தி சென்று விட்டார். பின்னர் அவர் ரூ.5 லட்சம் கேட்டு மாணவியின் குடும்பத்தினரை மிரட்டி உள்ளார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் நாகை எஸ்.பி. அபிநவ்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சகான்ஹாய், நாகூர் இன்ஸ்பெக்டர் கார்த்தி, திட்டச்சேரி சப்–இன்ஸ்பெக்டர் இனியன் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைத்து மாணவியை கடத்தி சென்ற கும்பகோணத்தை அடுத்த புளியஞ்சேரியை சேர்ந்த இப்ராகிம் மகன் இதயத்துல்லா (வயது 24) என்பவரை கைது செய்து மாணவியை மீட்டனர்.