தலைப்புக்காக நடிக்க ஒப்புக்கொண்ட ஜி.வி.பிரகாஷ்!!

Read Time:2 Minute, 34 Second

Untitled-12தமிழ் சினிமாவின் ‘டார்லிங்’ ஜி.வி.பிரகாஷ் தனது அடுத்தப்படமான ‘பென்சில்’ படத்தின் வௌியீட்டுத் திகதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில், த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் இசையமைக்கும் பணியையும் ஜி.வி.பிரகாஷ் மேற்கொண்டு வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தில் நடித்து வருவது குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது,

ஒரு கிராஃப் மேலேயே போய்க்கொண்டு இருந்தால்தான் அழகு. அதுபோல் நம்முடைய வளர்ச்சிக்கேற்ப நம்முடைய உழைப்பும் வளர்ந்தால்தான் நன்றாக இருக்கும். நடிப்பிற்காக எனக்குள் இருக்கும் சிறுசிறு கூச்சங்களைவிட நேர்ந்தது. இது ஒரு இமலாய சவாலாக இருந்தது. தொடக்கம் முதலே ஒரு பயம் கலந்த சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. ‘டார்லிங்’ படம் மூலம் மக்கள் என்னை ஒரு நடிகனாக ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்து ‘பென்சில்’ வெளிவர தயாராக இருக்கிறது.

இப்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் நடித்து வருகிறேன். இப்படத்தின் டைட்டிலை இயக்குனர் என்னிடம் சொல்லும்போதே எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இப்படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும். எளிதில் இந்த கதாபாத்திரம் அனைவரையும் கவரும். இப்படம், அதன் கதைக்காகவும், அதன் கதாபாத்திரங்களுக்காகவும் பேசப்படும். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எப்பொழுதும் உற்சாகம் நிறைந்து இருக்கும். விரைவில் இசையை வெளியிடவுள்ளோம் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதல்ஜோடியை கொல்ல முயற்சி: 2 பேர் கைது!!
Next post நாகர்கோவிலில் பெட்ரோல் குண்டுகளுடன் சிக்கிய 3 வாலிபர்கள் கைது!!