வாட்ஸ்அப் மூலம் பெண் மாஜிஸ்திரேட்டுக்கு ஆபாசப் படங்களை அனுப்பிய 45 வயது நபர் கைது!!
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த வடக்கு தினஜ்பூர் மாவட்ட பெண் மாஜிஸ்திரேட்டுக்கு யாரோ ஒருவர் தொடர்ந்து ஆபாசப் படங்களை வாட்ச்அப். மூலம் தொடர்ந்து அனுப்பி வந்தார்.
இதனையடுத்து, அவரது செல்போன் நம்பரை மையமாக வைத்து நடத்திய விசாரணையில் இந்த போக்கிரித்தனத்தை செய்து வந்தது இஸ்லாம்பூர் பகுதியை சேர்ந்த அப்துல் காலேக்(45) என்பது தெரியவந்தது. அவரை நேற்று கைது செய்த போலீசார் நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தி, 14 நாள் காவலில் அடைத்தனர்.