கணவர் தியாகுவுக்கு எதிராக கவிஞர் தாமரையின் தர்ணா போராட்டம் வேளச்சேரிக்கு மாற்றம்!!
பிரபல சினிமா பாடலாசிரியர் தாமரை. இவருக்கும் எழுத்தாளர் தியாகுக்கும் கடந்த 2001–ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சமீபத்தில் தாமரையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தியாகு பிரிந்து விட்டார்.
ஓடிப்போன கணவரை சேர்த்து வைக்க கோரி, தாமரை சூளைமேடு பெரியார் பாதையில் உள்ள கணவர் தியாகுவின் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் திடீர் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த இந்த தர்ணா போராட்டம் தற்போது கணவர் தியாகுவின் வேளச்சேரி வீட்டு முன்பு தொடர்கிறார்.
வேளச்சேரி ராஜீவ் நகரில் உள்ள அம்மன் கோவில் தெருவில் உள்ள தியாகுவின் வீட்டு முன்பு தன் மகனுடன் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அம்பத்தூரில் உள்ள தாய் உயர்நிலை பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை கவிஞர் தாமரையுடன் போராட்டத்தில் நேற்று முதல் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.