உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய காதலன்: விபசாரத்தில் ஈடுபட்ட என்ஜினீயரிங் மாணவி!!

Read Time:6 Minute, 53 Second

b9e2e58d-1a7f-42a6-8c4f-3fd19c7ff96b_S_secvpfகோவையில் அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சந்திரமோகன், சந்திரசேகர், ராஜேஸ்வரி, சப்–இன்ஸ்பெக்டர் சாஸ்தா மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் அந்த ஓட்டலை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது அந்த ஓட்டலில் விபசாரம் நடப்பது உறுதியானது. விபசாரத்தில் ஈடுபடுவோரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி அந்த ஓட்டலுக்குள் அதிரடியாக புகுந்து அங்கிருந்த என்ஜினீயரிங் மாணவி உள்பட 3 பெண்களை போலீசார் மீட்டனர்.

அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக கோவைப் புதூர் திருப்பதி நகரைச் சேர்ந்த பிருத்திவிராஜ்(32), அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மனைவி விஜயலட்சுமி(38) ஆகியோரை கைது செய்தனர்.

விபசாரத்துக்கு பயன்படுத்திய கார், 2 செல்போன்கள், ரொக்கம் 1 லட்சத்து 1,860 ரூபாயை பறிமுதல் செய்தனர். நட்சத்திர ஓட்டலில் விபசாரத்தில் சிக்கியவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

நட்சத்திர ஓட்டலில் சிக்கிய பெண்களில் ஒருவர் ஊட்டியைச் சேர்ந்தவர் ஆவார். என்ஜினீயரான அவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். பெண்கள் ஆஸ்டலில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வருகிறார்.

கைநிறைய சம்பளம் வாங்கும் நீங்கள் ஏன் இப்படி ஒரு தவறான முடிவை மேற்கொள்ள காரணம் என்ன என்று போலீசார் கேட்ட போது ‘நான் மிகவும் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டேன்.

அதற்கு நான் வாங்கும் சம்பளம் போதுமானதாக இல்லை. எனவே இந்த தவறான முடிவை எடுத்து விட்டேன். என்னை மன்னியுங்கள். இனிமேல் இதுபோன்ற செயலில் ஈடுபடமாட்டேன் என்று கூறி கண்ணீர் சிந்தினார்.

மற்றொரு பெண்ணிடம் விசாரித்தபோது அவர் கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். படித்து வருவது தெரிய வந்தது.

மதுரையைச் சேர்ந்த இவர் அதே கல்லூரியில் படிக்கும் மாணவரை காதலித்திருக்கிறார். இருவரும் நெருங்கி பழகியிருக்கிறார்கள். அப்போது பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்திருக்கிறார்கள். அந்த காட்சியை வாலிபர் மாணவிக்கு தெரியாமலேயே வீடியோ எடுத்திருக்கிறார்.

சிறிது காலத்துக்குப் பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் அந்த மாணவர் மீண்டும் மாணவியை சந்தித்திருக்கிறார். அப்போது ‘நாம் உல்லாசமாக இருந்த காட்சியை வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன். நான் கேட்கும் பணத்தை நீ தர வேண்டும். இல்லாவிட்டால் அதனை இணையதளங்களில் வெளியிடுவேன்’ என்று மிரட்டியிருக்கிறார்.

இணையதளத்தில் காட்சி வெளியானால் நம் மானம் போய் விடும் என்பதை உணர்ந்த அந்த மாணவி முதலில் தான் அணிந்திருந்த நகைகளை விற்று கொடுத்திருக்கிறார். அதன் பின்னரும் அந்த மாணவர் தொடர்ந்து பணம் கேட்கவே விபசாரத்தில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அந்த மாணவரிடம் கொடுத்தது தெரியவந்தது.

மற்றொரு பெண் குடும்ப சூழ்நிலை காரணமாக விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறியிருக்கிறார். போலீசாரிடம் சிக்கிய 3 பேரும் கோவையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைதான விபசார கும்பலிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

கோவை வடவள்ளி வேம்பு அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் அக்னிராஜா. பழக்கடை நடத்தி வருகிறார். இவர் வடவள்ளி–கணுவாய் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் அக்னிராஜாவை வழிமறித்தார்.

அவர் அக்னிராஜாவிடம் ‘எங்களிடம் பெங்களூர் அழகி இருக்கிறார். நீங்கள் அவருடன் உல்லாசமாக இருக்கலாம். 2 ஆயிரம் தந்தால் போதும்’என்றார். பணம் எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு திரும்பிய அக்னிராஜா நேராக வடவள்ளி போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு நின்று கொண்டிருந்த வாலிபரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த சலீம்மாலிக் என்பதும் வடவள்ளி ஜி.சி.டி. நகரில் ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து பெங்களூர் அழகியை வைத்து விபசாரம் நடத்துவதும் தெரியவந்தது.

போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கிருந்த பெங்களூர் அழகி பிரியாவை மீட்டனர். அங்கிருந்த புரோக்கர்களான தேனியைச் சேர்ந்த காஜா மைதீன், வடவள்ளியைச் சேர்ந்த சந்தோஷ் ஆகியோரை கைது செய்தனர்.

கைதான 3 புரோக்கர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருத்தணியில் இன்று நடக்க இருந்த சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்!!
Next post விழுப்புரத்தில் அரசு அதிகாரி வீட்டில் ரூ.6 லட்சம் நகை–பணம் கொள்ளை!!