45,000 ரூபாக்கு விற்பனையான அதிசய கோழி முட்டை!!

Read Time:1 Minute, 44 Second

MAIN-Round-Eggபிரபல ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டான ஈபே-யில் ஒரு கோழியின் முட்டை ரூ.45 ஆயிரத்திற்கு விற்பனையாகியுள்ளது. இங்கிலாந்தின் லட்சிங்டன்னில் வசித்து வருபவர் கிம் பிராட்டன். அவரது தோட்டத்தில் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவரது கோழிகளில் செல்லமாக வளர்ந்து வந்த பிங் பாங் அதிசயமாக பந்து போல வட்ட வடிவத்தில் முட்டையிட்டது.

ஆச்சர்யத்தில் வாயடைத்து போன கிம் இந்த முட்டையை ஆன்லைனில் விற்க முடிவு செய்தார். பின்னர் ஈபே-வெப்சைட்டில் விற்பனைக்கு விளம்பரம் செய்தார். அதை பார்த்து பலர் வாங்குவதற்கு முன்வந்தனர். குறிப்பாக, 64 பேர் ஏலம் கேட்பது போல மாறி மாறி அதிக விலைக்கு கேட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் அந்த அதிசய முட்டையை வாங்கி பாதுகாக்கவே முடிவு செய்திருந்தனர். இறுதியாக ஒருவருக்கு ரூ.45 ஆயிரம் (480 பவுண்டுகள்) விலைக்கு விற்கப்பட்டது. வாங்கியவரின் விபரம் தெரியவில்லை.

அந்த முட்டையை விற்ற பணத்தை அவரது நண்பரின் மகன் நோயால் இறந்ததன் நினைவாக சிஸ்டிக் பிப்ரோசிஸ் என்ற டிரஸ்ட்டுக்கு நன்கொடையாக கொடுத்து விட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என் மகளைப் பற்றி தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்தை ஆதரிப்போம்: டெல்லி மாணவியின் பெற்றோர் பேட்டி!!
Next post குன்னூர் கருவூலத்தில் மோசடி செய்த 5 அதிகாரிகளுக்கு 1½ ஆண்டு தண்டனை!!