நிச்சயதார்த்தம் நடந்தது.. விரைவில் திருமணம்…!!
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அருள்நிதி. திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.முத்துவின் இளைய மகனான அருள்நிதி, தமிழில் ‘வம்சம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானர்.
இப்படம் பெரும் வெற்றியடைந்ததை அடுத்து அவருக்கு படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. இதைத் தொடர்ந்து ‘மௌனகுரு’, ‘ஒரு கண்ணியும் மூன்று களவாணிளும்’ என இவர் நடித்த படங்கள் அவருக்கு பெரிய நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. தற்போது இவருடைய நடிப்பில் ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்‘, ‘டிமாண்டி காலணி’ ஆகிய படங்கள் வெளிவரவிருக்கிறது.
இந்நிலையில், அருள்நிதிக்கும், உயர்நிதிமன்ற முன்னாள் நீதிபதியின் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
இருவரின் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சிக்கு வேறு யாரும் அழைக்கப்படவில்லை. விரைவில் திருமண தேதியை அறிவிக்கவிருக்கிறார்கள்.
Average Rating