பஸ்சில் பயணியிடம் செல்போன் திருட்டு: வாலிபருக்கு தர்ம அடி!!
பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் மாநகர பஸ்சில் (44) வந்த போது அவரது செல்போனை அருகில் நின்ற வாலிபர் பறித்து ஓட்டம் பிடித்தான்.
பயணிகள் அந்த வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அவன் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்று தெரிந்தது. அவனிடம் ஏழுகிணறு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.