பீகாரில் வீட்டின் கதவை தட்டி கல்லூரி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசிய கொடூரன் கைது!!
பீகார் மாநிலம், சிதாமாரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் படித்துவரும் மாணவி பார்கைனியா கிராமத்தில் உள்ள தனது தாய்வழி தாத்தாவின் வீட்டில் இருந்தபடி கல்லூரிக்கு சென்று வருகிறார்.
இன்று அந்த மாணவி வீட்டினுள் இருந்தபோது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு திறப்பதற்காக அந்த மாணவி எழுந்து சென்றாள், கதவை திறந்ததும் அவரது முகத்தின் மீது ஆசிட்டை ஊற்றிவிட்டு ஒரு உருவம் தப்பியோடியது.
எரிச்சல் தாங்காமல் கதறித்துடித்த அந்த மாணவி தரையில் புரண்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக அவரது உறவினர்கள் அளித்த புகாரையடுத்து, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் மாணவியிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
அதன் அடிப்படையில், முஹம்மது ஆஷிக் என்பவனை கைது செய்த போலீசார் குற்றச்சாட்டு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.