என் மகள் சோனம் கபூர் உடல்நிலை தேறுகிறது : அனில் கபூர்!!
இந்தி திரையுலகில் சோனம்கபூர் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தி, தமிழில் வந்த ‘ராஞ்சனா’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கிறார்.
சோனம்கபூரை சமீபத்தில் பன்றி காய்ச்சல் தாக்கியது. இந்தியில் சல்மான்கான் ஜோடியாக ‘பிரேம்ரதன் தன் பாயே’ என்ற படத்தில் சோனம்கபூர் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்துக் கொண்டு இருந்தபோதுதான் பன்றி காய்ச்சல் தாக்கியது.
உடனடியாக முன்பை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அனில் கபூர் கூறும்போது,
எனது மகள் சோனம்கபூருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மும்பை விட அவரது உடல்நிலையில் முன்னேற்றம் தெரிகிறது. குணமாகிக் கொண்டு வருகிறார். குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அனில்கபூர் கூறினார்.