மேற்கு மாம்பலத்தில் கட்டிப்போட்டு நகை கொள்ளை போனதாக நாடகமாடிய பெண் சிக்கினார்!!
மேற்கு மாம்பலம் சீனிவாச ஐயங்கார். 2–வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சபீதா (33). நேற்று மாலை அவர் குமரன் நகர் போலீசில் அளித்துள்ள புகாரில் மர்ம நபர்கள் என்னை கட்டிப்போட்டு பீரோவில் இருந்த 50 பவுன் நகை ரூ. 10 அயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்’’ என்று கூறி இருந்தார்.
சபீதாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். முன்னுக்கு பின் முரணாக பேசிய சபீதா பின்னர் நகை கொள்ளை போனதாக நாடகமாடியதை ஒப்புக் கொண்டார்.
அவர் போலீசாரிடம் கூறும்போது, அண்ணனின் திருமண ஏற்பாட்டிற்காக 36 பவுன் நகையை அடகு வைத்து கணவருக்கு தெரியாமல் ரூ.4 லட்சத்தை தந்தையிடம் கொடுத்தேன் என்று கூறியுள்ளார்.