தோழி இறந்த சோகத்தில் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை!!
தண்டையார்பேட்டை ராஜசேகர் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் பிரித்தா (18). தனியார் கம்பெனி ஊழியர். இவரது நெருங்கிய தோழி காயத்திரி. இவர் கடந்த 1–ந்தேதி நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனால் பிரித்தா மனவேதனை அடைந்தார்.
நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது பிரித்தா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்து வருகிறார்.