கத்திமுனையில் இளம் பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை: பக்கத்து வீட்டுக்காரர் சிறையில் அடைப்பு!!
கேரள மாநிலம் சித்தூர் தாலுகா முதலமடை கரிப்பாடி சல்லையை சேர்ந்தவர் கண்டமுத்தான் (வயது 41). அருகில் வசிக்கும் இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்றார்.
உள்ளே சென்ற கண்டமுத்தான் கத்தியை காட்டி அந்த இளம்பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அதிர்ச்சியடைந்த இளம்பெண் கண்டமுத்தானின் பிடியில் இருந்து தப்பினார்.
பின்னர் கொல்லங்கோடு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமாரிடம் இது குறித்து புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் கண்டமுத்தானை தேடிவந்தனர்.
பதுங்கியிருந்த அவரை மாலை 6 மணிக்கு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கண்டமுத்தானை சித்தூர் நீதிமன்ற நீதிபதியின் வீட்டுக்கு கூட்டிச்சென்று ஆஜர்படுத்தினர்.
அவர் கண்டமுத்தானை 14 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.