முழுக்க முழுக்க இந்தியப் பெண்கள் இயக்கிய 4 மகளிர் தின சிறப்பு விமானங்கள்!!

Read Time:1 Minute, 49 Second

195e7e36-583a-40c9-ab93-0f4c3781af9d_S_secvpfசர்வதேச மகளிர் தினமான இன்று முழுக்க முழுக்க பெண் விமானிகள் மற்றும் சிப்பந்திகள் கொண்ட 4 சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்கியுள்ளது. இதில் 2 விமானங்கள் உள்நாட்டு வழித்தடத்திலும் மேலும் இரு விமானங்கள் சர்வதேச வழித்தடத்திலும் இயக்கப்பட்டன.

உலகிலேயே முதன்முறையாக முழுக்க முழுக்க பெண்கள் இயக்கிய விமானச் சேவையை 1985-ம் ஆண்டு ஏர் இந்தியா அறிமுகப்படுத்தியது. இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு சரியாக 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மீண்டும் இந்த சிறப்பு விமானச் சேவை இயக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுச் சேவையாக மும்பை-டெல்லி வழித்தடத்திலும், டெல்லி-ஜோத்பூர்-மும்பை வழித்தடத்திலும் 2 விமானங்கள் இயக்கப்பட்டன. சர்வதேச வழித்தடத்தில் டெல்லி-மெல்போர்ன் மற்றும் மும்பை-மஸ்கட்-மும்பை இடையில் இரு விமானங்கள் இயக்கப்பட்டன.

கடந்த 1985-ம் ஆண்டு கொல்கத்தாவில் இருந்து சில்ச்சார் வழித்தடத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஓட்டிச் சென்று சாதனை படைத்த அதே இரு பெண் விமானிகள் இன்று டெல்லி-மெல்போர்ன் இடையிலான விமானத்தை ஓட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருங்கல் அருகே பிளஸ்–1 மாணவி தூக்கு போட்டு தற்கொலை: டி.வி. பார்த்ததை கண்டித்ததால் விபரீதம்!!
Next post தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் சஸ்பெண்டு: தேசிய கீதத்தை அவமதித்து ரகளை செய்ததால் நடவடிக்கை!!