6 வயது சிறுமியை இரும்புக் கம்பியால் பாலியல் சித்திரவதை செய்த மிருகம் கைது!!
மங்கையராய் பிறந்திடவே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று சொல்லி மகளிர் தினம் கொண்டாடும் நம் சமூகம் அப்படி மாதவம் செய்து இந்த பூமிக்கு வந்த பெண்களையும், சிறுமிகளையும் நடத்தும் விதம் இன்னும் பேரதிர்ச்சி அளிப்பதாகத்தான் இருக்கிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் புறநகர்ப்பகுதியில் உள்ள கட்டுமான தளத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் நபர், 6 வயது சிறுமியின் அந்தரங்க உறுப்பை இரும்பு ராடைக் கொண்டு சிதைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளி அன்று நடந்த இந்த கொடூர செயலைச் செய்த 25 வயதான அந்த செக்யூரிட்டியை போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது தனக்கும் தன்னுடன் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும், சிறுமியின் தந்தைக்கும் ஒரு வருடமாக தனிப்பட்ட விரோதம் இருந்து வந்ததாகவும் அவருக்கு பாடம் புகட்டவே இதை செய்ததாகவும் கூறியுள்ளான்.
பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த வாக்குமூலத்தையும் மருத்துவ பரிசோதனை முடிவுகளையும் வைத்து சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லையென்றும் ஆனால் அவளின் அந்தரங்க உறுப்பை சிதைக்கும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.