சுகாதாரத்தை பராமரிக்காத மாணவிகள் விடுதி வார்டன் மாற்றம்: அமைச்சர் அதிரடி உத்தரவு!!
சுற்றுப்புற சுகாதாரத்தை பராமரிக்காத அரசு மகளிர் விடுதி வார்டன் மாற்றப்பட்டார்.
கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் வெளி மாவட்டத்தை சேர்ந்த 44 மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்.
இந்த விடுதியில் ஆதி திராவிடர்மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது மாணவிகள் கல்லூரிக்கு சென்று இருந்தனர். விடுதியில் இருந்த உணவு பொருட்களின் கையிருப்பு, சமைக்கப்பட்ட உணவின் தரம், சுற்றுப்புற சுகாதாரம், கழிவறை, குடிநீர் ஆகியவற்றை அமைச்சர் பரிசோதித்தார்.
பின்னர் அவர் கூறும்போது, சுற்றுப்புற சுகாதாரம் சரிவர பராமரிக்கப்படவில்லை என்ற புகார் உள்ளது. எனவே வார்டனை மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளேன் என்றார்.