By 9 March 2015 0 Comments

நெருங்கி பழகி உல்லாசம்: தொழில் அதிபரை சிறை வைத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய 2 தோழிகள் கைது!!

c5f80b0a-40b8-4b80-acff-cf754ae232ff_S_secvpfகரூர் வையாபுரி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவர் டயர் டீலர்ஷிப் எடுத்து விற்பனை செய்து வருகிறார். தான்தோணிமலை ஜெ.ஜெ. நகரை சேர்ந்த சரிதா (33) என்ற பெண் ரமேசுடன் நெருங்கி பழகினார். அவ்வப்போது தனது வீட்டிற்கு ரமேஷை அழைத்து சரிதா நெருக்கமாக இருந்துள்ளார்.

இதற்காக சரிதாவிற்கு ரமேஷ் பணம் கொடுத்து வந்தார். இந்த நிலையில் சரிதா தனது தோழி ஜீவா (38) என்பவரை ரமேசுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதன் பின்னர் ரமேஷ் இரு பெண்களுடனும் நெருங்கி பழகி உள்ளார். தொழில் அதிபர் ரமேசிடம் 2 பேரும் அடிக்கடி பணம் வாங்கி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரமேசை தனது வீட்டிற்கு வருமாறு சரிதா அழைத்துள்ளார், ரமேஷ் அங்கு சென்றபோது ஜீவாவும் உடன் இருந்தார். அப்போது அவர்கள் தங்களுக்கு ரூ.5 லட்சம் பணம் வேண்டும் என கேட்டுள்ளனர். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என ரமேஷ் கூறியுள்ளார்.

இதையடுத்து சரிதாவும் அவரது தோழி ஜீவாவும் சேர்ந்து ரமேசின் கை, கால்களை கட்டி வீட்டிற்குள் வைத்து பூட்டி சிறை வைத்தனர். பின்னர் சென்னையை சேர்ந்த கூலி படையினர் சூரிய பிரகாஷ், கேசவன் (39) ஆகிய 2 பேரையும் அழைத்து வந்து ரமேசை தாக்கி உள்ளனர்.

வலி தாங்க முடியாமல் ரமேஷ் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பசுபதி பாளையம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்து கேசவன், சூரிய பிரகாஷ், சரிதா, ஜீவா ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் சரிதா, ஜீவா இருவரும் கரூர் பகுதியில் உள்ள தொழில் அதிபர்களை குறிவைத்து நெருங்கி பழகி ஆசைவார்த்தைகள் கூறி அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறித்தது தெரிய வந்துள்ளது.

இந்த சதி வலையில் கரூர் பகுதியை சேர்ந்த பல தொழில் அதிபர்கள் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். வெளியில் தெரிந்தால் வெட்கக் கேடு என நினைத்து யாரும் போலீசில் புகார் செய்யவில்லை. இதனால் இக்கும்பல் தைரியமாக செயல்பட்டுள்ளது.

கரூர் தோழிகளிடம் சிக்கி பணம் இழந்த தொழில் அதிபர்கள் குறித்தும், தமிகத்தில் வேறு நகரங்களில் இவர்கள் பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளனரா? என்பது பற்றியும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



Post a Comment

Protected by WP Anti Spam