பேராசிரியர் என்று ஏமாற்றி என்ஜினீயரிங் கல்லூரியில் பணிபுரிந்த ஆந்திர வாலிபர் சிக்கினார்!!

Read Time:2 Minute, 45 Second

16485aa5-0584-4047-85fc-3d144561da30_S_secvpfபூந்தமல்லியை அடுத்த தண்டலம் பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ரவிக்குமார் கடந்த 2012–ம் ஆண்டு ஆந்திரா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி., முடித்து உள்ளதாக பேராசியராக பணியில் சேர்ந்தார்.

இந்த நிலையில் ரவிக்குமாரின் படிப்பு மீது சந்தேகம் அடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் அவரது சான்றிதழை சரிபார்த்தனர். அப்போது ரவிக்குமார் கொடுத்து இருப்பது போலிச் சான்றிதழ் என்பது தெரியவந்தது.

இது குறித்து கல்லூரி முதல்வர் வெங்கடசாமி ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. ரவிக்குமார் 10–ம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ளார். நுனி நாக்கில் ஆங்கிலம் சரளமாக பேசும் அவர் ஆந்திராவில் உள்ள ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து இருக்கிறார்.

மாணவர்கள் கல்லூரி சான்றிதழ்களை ஜெராக்ஸ் எடுக்க வரும் போது கூடுதலாக ஜெராக்ஸ் எடுத்து வைத்து அதே போன்று போலியாக அவரே பி.எச்.டி. சான்றிதழ் தயாரித்து உள்ளார்.

இதனை வைத்தே ரவிக்குமார் தண்டலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பணியில் சேர்ந்தார். இதனை சரியாக கவனிக்காத கல்லூரி நிர்வாகம் அவருக்கு மாதம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் சம்பளம் வழங்கி உள்ளதாக தெரிகிறது.

பணமும், கவுரவமான வேலையும் கிடைத்த மகிழ்ச்சியில் ரவிக்குமார் தனது ஆங்கில புலமையாலும், சமாளிக்கும் திறமையாளும் வகுப்புகளுக்கு சென்று பாடம் நடத்தினார்.

10–ம் வகுப்பு முடித்தவர் என்ஜினீயரிங் கல்லூரியில் 3 ஆண்டுகளாக பேராசியராக இருந்த சம்பவம் கல்லூரி பேராசிரியர்களிடமும், மாணவர்களிடேயையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாங்கிய அறையால் கூந்தலை வெட்டிய நடிகை!!
Next post பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற பெண் உயிருடன் எரிப்பு!!