“நீ பார்க்க அசிங்கமாக இருக்கிறாய்”: பதிலால் அசத்திய மாணவி (வீடியோ இணைப்பு)!!

Read Time:2 Minute, 21 Second

blackgirl_reply_002பஹாமாஸ் நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் தனது கருப்பு நிறத்தை பார்த்து கிண்டலடித்தவர்களுக்கு மாணவி ஒருவர் தக்க பதில் அளித்துள்ளார்.
கருப்பினத்தை சேர்ந்த Siahj ‘Cici’ Chase என்ற 4 வயது மாணவி தனது தாயாருடன் பஹாமாஸின்(Bahamas) தலைநகரான நாசவ்வில்(Nassau) வசித்து வந்துள்ளார்.

நாசவ் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் படித்த வந்த அந்த மாணவியை சக மாணவி ஒருவர், ‘நீ பார்க்க அசிங்கமாக இருக்கிறாய்’ என கிண்டலடித்துள்ளார்.

இதை கேட்ட அடுத்த வினாடியே, ‘நான பள்ளிக்கூடத்திற்கு படிக்க தான் வருகிறேனே தவிர, அழகாக காட்டிக்கொள்ள அல்ல’ என முகத்தில் அடித்தார் போல பளீரென பதில் அளித்துள்ளார்.

ஆனால், கிண்டலடித்த மாணவி, ‘நீ பார்க்க மிக மோசமாக இருக்கிறாய்’ என மீண்டும் கிண்டலடிக்க, அதற்கு Cici, ‘ஏன்….நீ உன் முகத்தை காலையில் கண்ணாடியில் பார்க்கவில்லையா’ என பதில் அளித்துவிட்டு அந்த மாணவிக்கு டாடா காட்டிவிட்டு கூலாக வீடு திரும்பியுள்ளார்.

வீட்டிற்கு வந்த தன் மகளிடம், பள்ளியில் நடந்தவைகளை கூற சொல்லி அதை ஒரு வீடியோவாக பதிவு செய்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

4 வயது மாணவியின் தைரியமான, அதே சமயம் அறிவுப்பூர்வமான இந்த பதிலை கேட்ட ஆயிரக்கணக்கான நபர்கள் அந்த மாணவிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சிசியின் தாயாரான Sonya கூறுகையில், தனது மகள் எப்பொழுதும் தைரியமாகவும், புத்தி கூர்மையுடன் தடாலடியாக பதில் அளிப்பவராக இருப்பது ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 6 வயது சிறுமியை இரும்புக் கம்பியால் பாலியல் சித்திரவதை செய்த மிருகம் கைது!!
Next post கருங்கல் அருகே பிளஸ்–1 மாணவி தூக்கு போட்டு தற்கொலை: டி.வி. பார்த்ததை கண்டித்ததால் விபரீதம்!!