தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் சஸ்பெண்டு: தேசிய கீதத்தை அவமதித்து ரகளை செய்ததால் நடவடிக்கை!!

Read Time:3 Minute, 34 Second

4ecca438-74b2-4300-8ae7-e2b88aa2b9ff_S_secvpfதெலுங்கானா சட்டசபையில் கடந்த சனிக்கிழமை கவர்னர் நரசிம்மன் உரை நிகழ்ச்சினார். அப்போது தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ரகளையில் ஈடுபட்டனர்.

கட்சி தாவிய எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அமளியில் ஈடுபட்ட அவர்கள் சபையில் தேசிய கீதம் இசைக்கும் போது மேஜையில் ஏறி நின்று கவர்னருக்கு எதிராக கோஷமிட்டனர்.

மேலும் கவர்னர் உரையை கிழித்து பந்து போல் உருட்டி கவர்னர் நரசிம்மன் மீது எறிந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேசிய கீதத்தை அவமதித்து ரகளை செய்த எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் பலர் கோரிக்கை விடுத்தனர்.

இன்று காலை சட்டசபை தொடங்கும் முன்பு சபாநாயகர் மதுசூதனசாரி சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டினார். எம்.எல்.ஏ.க்கள் ரகளை செய்த வீடியோ காட்சியை அவர்களுக்கு காட்டி ஆலோசனை நடத்தினார்.

கூட்ட முடிவில் தேசிய கீதத்தை அவமதித்த தெலுங்கு தேச எம்.எல்.ஏ.க்கள், மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் மன்னிப்பு கேட்க தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் மறுத்து விட்டனர்.

இதையடுத்து தெலுங்கு தேச எம்.எல்.ஏ.க்கள் ரேவன் ரெட்டி, எர்ர பள்ளி தயாகரராவ், காந்தி, ராஜேந்திர ரெட்டி, கிருஷ்ணாராவ், பிரகாஷ் சவுடு, கோபிநாத், சன்ரா, விவேக், தாயன்னா ஆகிய 10 பேரையும் பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்டு செய்து சபாநாயகர் மதுசூதன சாரி சட்டசபையில் அறிவித்தார்.

சஸ்பெண்டு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. சம்பத் சபையில் மன்னிப்பு கேட்டதால் அவர் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது.

சஸ்பெண்டு நடவடிக்கையை ஓரிரு நாட்களாக குறைக்க வேண்டும் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூறியதற்கு பதில் அளித்த முதல்–மந்திரி சந்திரசேகர ராவ் மருமகனும் மந்திரியுமான ஹரிஸ்ராவ் ‘‘தேசிய கீதத்தை அவமதித்தவர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இருக்கும் போது எம்.எல்.ஏ.க்களுக்கு குறைந்தபட்ச தண்டனையே வழங்கப்பட்டு உள்ளது’’ என்றார்.

எம்.ஐ.எம். கட்சி உறுப்பினர் அக்பருதீன் பேசும் போது ‘‘தேசிய கீதத்தை அவமதித்தவர்களை நாடு கடத்த வேண்டும்’’ என்று ஆவேசமாக கூறினார்.

சஸ்பெண்டு செய்யப்பட்ட 10 எம்.எல்.ஏ.க்களும் இன்று சபைக்கு வராமல் வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முழுக்க முழுக்க இந்தியப் பெண்கள் இயக்கிய 4 மகளிர் தின சிறப்பு விமானங்கள்!!
Next post பெரியபாளையம் பெண் கொலையில் வாலிபர் கைது!!