மேடவாக்கம் ஏரியில் வடமாநில வாலிபர் கல்லால் அடித்து கொலை!!
சோழிங்கநல்லூரை அடுத்த மேடவாக்கம், பெரும்பாக்கம் ஏரியில் வாலிபர் பிணம் கிடப்பதாக பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவருக்கு சுமார் 20 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
வடமாநில வாலிபர் தோற்றத்தில் இருந்த அவரது தலை, நெற்றியில் கல்லால் தாக்கியதிற்கான பலத்த காயம் காணப்பட்டது. ஏரிக்கரை ஓரம் 6 பிளாஸ்டிக் டம்ளர், காலி மதுபாட்டில்கள் கிடந்தன.
எனவே நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் அவரை கல்லால் அடித்து கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
மேடவாக்கம் பகுதியில் வேலை பார்க்கும் வடமாநில வாலிபர்கள் பற்றிய விவரத்தை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.