பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் கிராமங்களுக்கு 1 லட்சம் ரூபாய்: முதல் மந்திரி அறிவிப்பு!!

Read Time:1 Minute, 39 Second

77abc09e-c496-4e8a-89ee-173f5e20b270_S_secvpfநாட்டின் பல மாநிலங்களில் டீக்கடைகளை விட அதிகமாக மதுக்கடைகள் பெருகி விட்டன. சில மாநிலங்களில் உயிரைக் குடிக்கும் மதுவினை ஊற்றிக் கொடுக்கும் தொழிலை அரசாங்கமே நடத்தி வருகின்றது.

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் கிராமங்களுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி ரகுபர் தாஸ் இன்று சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இன்று சட்டசபையில் மதுவிலக்கு தொடர்பான விவாதத்தின்போது, கிராமங்களில் புதிதாக மதுக்கடைகள் திறப்பதற்கு அரசு அனுமதிக்க கூடாது என எதிர்க்கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய முதல் மந்திரி ரகுபர் தாஸ், இதற்கான முன்னெடுப்புகளை செயல்படுத்த மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த கிராமப் பெண்கள் முயற்சிக்க வேண்டும் என தெரிவித்தார். மதுக்கடைகளே இல்லாத கிராமங்களுக்கு மாநில அரசின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 20000 வேலை வாய்ப்புகளை அளிக்கும் நிறுவனம்: மகிழ்ச்சியில் மக்கள் (வீடியோ இணைப்பு)!!
Next post பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 1500-ஐ எட்டியது: 26 ஆயிரம் பேருக்கு நோய் தாக்கம்!!