உ.பி.யில் காட்டு மிராண்டித்தனம்: முதிய தம்பதியர் துடிதுடிக்க சுட்டுக்கொலை!!
அரசியல் கொலை, ஆதாயக் கொலை, கவுரவக் கொலை, வழிப்பறி, கொள்ளை, கற்பழிப்பு, ஆள்கடத்தல், உள்ளிட்ட அனைத்துவகை கொடுங்குற்றங்களும் அதிகரித்து வரும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 80 வயது முதியவரையும் அவரது மனைவியான 75 வயது மூதாட்டியையும் இன்று அடையாளம் தெரியாத நபர்கள் காட்டுமிராண்டித்தனமாக சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள அவுரயா மாவட்டத்தின் கியோட்ரா கிராமத்தை சேர்ந்த மங்கல் சிங்(80) மற்றும் அவரது மனைவி கெண்டா தேவி(75) ஆகியோரை இன்று அடையாளம் தெரியாத சில சமூக விரோதிகள் சுட்டுக்கொன்றனர்.
இந்த கோர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மாவட்ட போலீசார், இந்த கொலைக்கான பின்னணி என்ன? கொலையாளிகள் யார்? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.