இந்தியாவின் மகள் ஆவணப்படத்தை திரையிட்ட 2 பேர் கைது!!

Read Time:1 Minute, 41 Second

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த மருத்துவ மாணவி கற்பழிப்பு தொடர்பாக ‘இந்தியாவின் மகள்’ என்ற பெயரில் ஆவணப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியின் பேட்டியுடன் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த படத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், இந்தியாவில் ஆவணப்படத்தை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, உத்தரபிரதேசத்தின் ஆக்ரா அருகே உள்ள ருப் தானு கிராமத்தில் நேற்று முன்தினம் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த கேதான் தீட்சித் மற்றும் கவுரவ் ஆகியோர் இந்த ஆவணப்படத்தை பொது இடத்தில் திரையிட்டனர்.

ஆவணப்படம் ஆங்கிலத்தில் இருந்தபோதிலும், அது குறித்து மொழிபெயர்க்க தன்னார்வ தொண்டர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த படத்தை ஏராளமான பெண்கள் உள்பட பலரும் பார்த்தனர்.

தடை செய்யப்பட்ட இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பியதற்காக எட்மாட்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கேதான் தீட்சித் மற்றும் கவுரவ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓடும் ரெயிலில் இருந்து 4 மாத பெண் குழந்தையை தூக்கி வீசிய கொலைகார தாய்: குழந்தை உயிர் பிழைத்தது!!
Next post கேரள மாநிலத்தில் விவாகரத்துக்காக காத்திருக்கும் 18 ஆயிரத்து 500 தம்பதிகள்!!