டெல்லியில் தொடரும் கற்பழிப்பு – இம்முறை வெளிநாட்டு பெண்: கஜகஸ்தான் பெண்ணை கற்பழித்த 3 பேர் கைது!!
நாட்டின் தலைநகரான டெல்லிக்கு வர்த்தக ரீதியாக சுற்றுப்பயணம் வந்த கஜகஸ்தான் பெண் 3 கயவர்களால் கற்பழிக்கப்பட்டார்.
27 வயதாகும் அப்பெண் கடந்த வியாழனன்று டெல்லி வந்துள்ளார். ஏற்கனவே பல முறை இது போன்ற வர்த்தக பயணத்தை மேற்கொண்ட போது கால் டாக்சி ஓட்டுனர் ஒருவர் அப்பெண்ணுக்கு அறிமுகமானார். அப்பெண் இம்முறை இந்தியா வந்த போதும் அந்த கார் டிரைவரே மீண்டும் கார் ஓட்டினார். கார் டிரைவர் மூலம் மேலும் இரு ஆண்கள் அப்பெண்ணுக்கு அறிமுகமாக, அவர்களுடன் வியாழனன்று இரவு தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு அப்பெண் சென்றார்.
அப்போது அப்பெண்ணை இருவரும் மாறி மாறி கற்பழித்துள்ளனர். இச்சம்பவத்திற்கு பிறகு அப்பெண் தனது ரூமுக்கு வெளியே அழுதபடி இருக்க, இதை பார்த்த ஓட்டல் ஊழியர் ஒருவர் அவரிடம் என்ன நடந்தது என விசாரித்தார். அப்போது தன்னை இரு நபர்கள் கற்பழித்ததாக அவர் கூறினார். உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட ஓட்டல் ஊழியர், கற்பழிப்பு சம்பவம் குறித்து எடுத்துக்கூறினார்.
இதையடுத்து ஓட்டலுக்கு விரைந்து வந்த போலீசார், அப்பெண்ணின் அறையில் இருந்த 2 கற்பழிப்பு குற்றவாளிகளை கைது செய்தனர். உள்ளூர் உளவு போலீஸ் அளித்த தகவலின் பேரில், கார் டிரைவரும் பின்னர் கைது செய்யப்பட்டான். நாட்டின் தலைநகரின் மானத்தை வாங்கும் இது போன்ற கற்பழிப்பு சம்பவங்கள் எப்போது களையப்படும் என்பதே டெல்லி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.