என் இடுப்பில் கை வைத்ததால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை கடித்தேன்: கம்யூ. பெண் எம்.எல்.ஏ. விளக்கம்!!
கேரள சட்டசபையில் நடந்த அமளியின்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவதாசன் நாயரை எதிர்க்கட்சியான கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. ஜமிலா பிரகாசம் கடித்து விட்டார். முதல்–மந்திரி உம்மன்சாண்டியை பாதுகாப்பதற்காக அவரது அருகே தான் நின்று கொண்டிருந்தபோது, பெண் எம்.எல்.ஏ. தன்னை கடித்ததாக சிவதாசன் நாயர் குற்றம் சாட்டினார்.
இதுபற்றி ஜமிலா பிரகாசம் எம்.எல்.ஏ. கூறும்போது, சட்டசபையில் அமளி நடந்தபோது பின்னால் இருந்து எனது கையை பிடித்து இழுத்து கீழே தள்ளினார்கள். எனது இடுப்பிலும் கை வைத்தனர். எனது முதுகிலும் அடி விழுந்தது.
நான் திரும்பி பார்த்தபோது, இதற்கு காரணம் சிவதாசன் எம்.எல்.ஏ. என்பதை அறிந்ததால் அவரை நான் கடித்தேன். என்னை காத்து கொள்ள போராடியதற்காக இவ்வாறு நடந்து கொண்டதில் தவறு ஒன்றும் இல்லை என்றார்.