நடுரோட்டில் நடந்த பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் சாவு: தாய் உயிர் ஊசல்!!
ஆந்திர மாநிலம் அனந்த புரம் மாவட்டம் செலிமே பள்ளியை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. இவரது மனைவி மாரட்கா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
உடனே உறவினர்கள் அவரை ஆட்டோவில் ஏற்றி ராயதுர்க்கா ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து கொண்டு இருந்தனர். ஆனால் வழியிலேயே மாரட்காவுக்கு பிரசவ வலி அதிகமானது. குழந்தை பிறக்கும் சூழ்நிலை உருவானது.
உடனே உறவினர்கள் ஆட்டோவை நிறுத்தி மாரட்காவை அருகில் உள்ள மர நிழலில் படுக்க வைத்தனர். சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. ஆனால் 2 குழந்தைகளும் இறந்த நிலையில் இருந்தது.
மராட்கா நிலைமையும் கவலைக்கிடமாக இருந்தது. உடனடியாக அவர் அருகில் உள்ள பிரம்மசமுத்திரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.