பேஸ்புக்: சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களை நீக்கச் சொல்வதில் இந்தியா முதலிடம், ஆறே மாதத்தில் 5832 பதிவுகளுக்கு தடா!!

Read Time:1 Minute, 47 Second

ec5fd6ae-9ddd-4b47-94a0-6e77116befea_S_secvpfஉலக அளவில் பேஸ்புக்கைத் தொடர்பு கொண்டு ஒருவரது உள்ளடக்கத்தை (நிலைத்தகவல், புகைப்படம், வீடியோ) நீக்கச் சொல்வதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

கலிபோர்னியாவை மையமாகக் கொண்டு இயங்கும் சமூக வலை தலமான பேஸ்புக் நிறுவனம் ஜூலை-டிசம்பர் 2014 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அரசு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் மதத்திற்கு எதிரானது, வெறுப்பை உண்டாக்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆறே மாதத்தில் இந்திய அரசின் உத்தரவுப்படி 5832 உள்ளடக்கங்களை தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேஸ்புக் கூறுகையில் “முதன்மையாக நாங்கள் சட்ட அமலாக்க முகவாண்மை, இந்திய கணினி அவசர எதிர்வினை குழு, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சகத்தின் பரிந்துரையின்படி, அமைதியின்மை, மற்றும் சீர்குலைவை ஏற்படுத்தும் மதத்திற்கு எதிரான, வெறுப்பைத் தூண்டும் பேச்சு ஆகியவற்றைக் கொண்ட உள்ளடக்கங்களை தடை செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களை நீக்கச் சொல்வதில் இந்தியாவிற்கு அடுத்தடுத்த இடங்களில் துருக்கி(3624), ஜெர்மனி (60), ரஷ்யா (55) போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேற்குவங்காளத்தில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் 10 பேர் கைது!!
Next post நாங்குநேரி அருகே ஓட்டல் உரிமையாளர் கொலை: நாகர்கோவில் கோர்ட்டில் 3 பேர் சரண்!!