நாங்குநேரி அருகே ஓட்டல் உரிமையாளர் கொலை: நாகர்கோவில் கோர்ட்டில் 3 பேர் சரண்!!
நாங்குநேரி அருகே உள்ள பாணான்குளத்தை சேர்ந்தவர் கொம்பையா (வயது 55). இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு இவர் ஓட்டலில் இருந்தபோது மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கும்பல் ஓட்டலுக்குள் புகுந்து கொம்பையாவை வெட்டி கொலை செய்தது.
இந்த கொலை தொடர்பாக அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலை கைவிட மறுத்ததால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
கொம்பையா கொலை குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்தநிலையில் கொலை தொடர்பாக நாகர்கோவில் 3–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று 3 பேர் சரண் அடைந்தனர்.
நாங்குநேரி தெற்கு கரந்தானேரியைச்சேர்ந்த மணிகண்டன் (28), டேனியல் ராஜ் (19), பிரகாஷ் (19) ஆகியோர் சரண் அடைந்தவர்கள்.