நடிக்க நயன் நிபந்தனை!!

Read Time:2 Minute, 13 Second

Nayanthara (1)மலையாளத்தில் சித்திக் பிரபல இயக்குனராக இருக்கிறார். இவர் ஏற்கனவே நயன்தாராவை வைத்து ‘பாடி கார்ட்’ என்ற மலையாள படத்தை எடுத்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. தமிழில் ‘காவலன்’ என்ற பெயரிலும் சித்திக்கே ரீமேக் செய்தார். இதில் விஜய் ஜோடியாக அசின் நடித்து இருந்தார்.

முதலில் இப்படத்தில் நடிக்க நயன்தாராவிடம் தான் கேட்டார். அவர் மறுத்து விட்டார். இந்தியிலும் இப்படம் ரீமேக் ஆகி வசூல் குவித்தது. ‘பாடி கார்ட்’ ரீமேக்கில் நடிக்காததை நினைத்து நயன்தாரா வருத்தப்பட்டார்.

இந்த நிலையில் தான் சித்திக் மலையாளத்தில் தற்போது இயக்கி வரும் ‘பாஸ்கர் த ராஸ்கல்’ படத்தில் மம்முட்டி ஜோடியாக நடிக்க நயன்தாராவை மீண்டும் அணுகினார். நயன்தாராவும் இதில் நடிக்க சம்மதித்தார். அத்துடன் ஒரு நிபந்தனையும் விதித்தார்.

அதாவது ‘பாஸ்கர் த ராஸ்கல்’ படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட எந்த மொழியில் ரீமெக் செய்தாலும் அதில் நானே நடிப்பேன் என்றாராம். சித்திக்கும் அதை ஏற்றுக் கொண்டார். அதன் பிறகே நயன்தாரா படப்பிடிப்புக்கு சென்றாராம். இப்படம் வருகிற விஷு தினத்தில் வெளியாகவுள்ளது.

‘பாஸ்கர் த ராஸ்கல்’ படம் தமிழிலும் ரீமேக் ஆக உள்ளது. இதற்கான வேலைகள் தொடங்கி உள்ளன. இந்த படத்திலும் ஏற்கனவே அளித்த உறுதிப்படி நயன்தாராவைவே நாயகியாக சித்திக் நடிக்க வைக்க உள்ளார். மம்முட்டி வேடத்தில் நடிக்கும் நாயகன் யார்? என்பது இன்னும் முடிவாகவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் செல்பி எடுப்பதற்கு கட்டுப்பாடு!!
Next post முகம் சுளிக்க வைக்கும் நூதன போராட்டம்: நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு பழங்குடி மக்கள் எதிர்ப்பு!!