முகம் சுளிக்க வைக்கும் நூதன போராட்டம்: நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு பழங்குடி மக்கள் எதிர்ப்பு!!

Read Time:1 Minute, 55 Second

c5c979b4-a951-4776-9c9a-cabb6acaad99_S_secvpfஅனைத்து செயல்பாடுகளும் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் இன்றைய நவீன உலகில் தர்ணா, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி என்று எதிர்ப்பை தெரிவிக்கும் போராட்ட வடிவங்களும் புதுப்புது வடிவங்கள் எடுக்கின்றன. அந்த வகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து ஜார்க்கண்ட் பழங்குடி மக்கள் செய்துள்ள போராட்டம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளிடையே எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், கடந்த ஞாயிறு அன்று, ஜார்க்கண்டின் லடேகர் மாவட்டத்தில் உள்ள பர்வாடி தாலுகா அலுவலகத்திற்கு எதிரே 60 பழங்குடி மக்கள் ஒன்று கூடி திடீர் போராட்டம் நடத்தினர். அப்போது, தாங்கள் கையில் கொண்டு வந்திருந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்திருத்தத்தை முன் மொழியும் பிரதிகளின் மேல் மலம் கழித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த போராட்டம் குறித்து பழங்குடி மக்களில் ஒருவர் கூறுகையில், இந்த போராட்டத்தின் நோக்கம் உடனடி அதிர்ச்சியை ஏற்படுத்தி, தங்களின் கருத்தை தெரிவிப்பதே என்றும், பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதும் இந்த போராட்டத்தை நடத்த போவதாகவும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிக்க நயன் நிபந்தனை!!
Next post டி.என்.பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்க இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!