(VIDEO) சுவிஸ் ”சுப்பர் ரலண்ட்” போட்டியில் ஈழதமிழ் சிறுவர்கள்..!!

Read Time:1 Minute, 57 Second

dream boys
சுவிஸ் நாடு தழுவிய ”சுப்பர் ரலண்ட்” போட்டியில் ஈழதமிழ் சிறுவர்களின் சுப்பர் மாறியோ நடனம் நடுவர்கள், பார்வையாளர்களை மிகவும் ஈர்த்தது. சுவிஸ் SF 1 எனும் அரச தொலைகாட்சி வருடாவருடம் நடாத்தும் ”சுப்பர் ரலண்ட்” போட்டியில் பலதரப்பட்ட போட்டியாளர்கள் தமது திறமைகளை வெளிக்காட்டுவர் அவர்களில் வெல்பவர்களுக்கு ஒரு லட்சம் சுவிஸ்பிராங் பரிசாக வழங்கி அந்த வருடத்திற்கான வெற்றியாளர்களாக அறிவிப்பர்.

இப்போட்டியில் இதுவரை எம்மவர்கள் பங்குபற்றியதில்லை. இந்த தடவை ”ட்றீம் போய்ஸ்” எனும் நடனக்குழு இப்போட்டியில் களம் இறங்கியுள்ளனர். பேர்ண் மானிலத்தின் ‘எம்மன்தாள்’ பகுதியைச் சேர்ந்த ”ட்றீம் போய்ஸ்” தனுயனின் நடன நெறிப்படுத்தலில் செல்வன்கள் ஓவியன், அஜிந்தன், கஜன், அனோஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

சிறுவர்காளிகிய இவர்களின் நடனத்தை நான்கு நடுவர்களும் பாராட்டியதோடு அடுத்த சுற்றுக்கும் தெரிவாக்கினர். சுவிஸின் பிரபல்யமான பாடகர் ‘டியே போபோ’ மனமகிழ்ந்து ரசித்து தனது வாழ்த்துக்களையும் தெரிவித்ததோடு இப்போட்டியில் கலந்து கொண்டதால் பேர்ண் மானிலத்தின் ‘எம்மன்தாள்’ பகுதியை பற்றி சுவிஸ் நாடுமுழுவதும் பேசப்படும் எனவும் தெரிவித்தார்.

இவர்கள் வெற்றிபெற நாமும் வாழ்த்துவோம்…!!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தகாத முறையில் நடந்து கொண்ட வாலிபரை தரதரவென இழுத்து போலீசிடம் ஒப்படைத்த பெண்!!
Next post பிரபாகரன் போரில் மரணிக்கவில்லை: அருகிலிருந்து தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்!!- “சனல் 4″ கலம் மக்ரே உடன் நேர்காணல் (வீடியோ)!!